» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசேகரத்தில் ஸ்டுடியோ சேதம் : தாய்,மகனுக்கு வலை

வெள்ளி 13, ஜூலை 2018 11:01:55 AM (IST)

குலசேகரத்தில் புகைப்பட ஸ்டுடியோவை சேதப்படுத்தி சூறையாடிய தாய் மற்றும் மகனை போலீஸார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்த தனேஷ் (48). இவர், குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள கட்டடத்தில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.  மேலும் அந்த கட்டடத்தின் முதல் தளத்தில் காலியாக கிடந்த மற்றொரு அறையை, அதன் உரிமை யாளரிடமிருந்து வாடகைக்கு பெற்று,  அண்மையில் ஸ்டுடியோவை விரிவு படுத்தினாராம்.  புதிதாக திறக்கப்பட்ட அறையை, ஏற்கெனவே நெல்லிக்காய், கிழங்கு உள்ளிட்ட பொருள்களை இருப்பு வைத்து  வணிகம் செய்து, பின்னர் அந்த வணிகத்தை  கைவிட்டிருந்த மணலிவிளை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பிரின்ஸ் (30), அதன் உரிமையாளரிடம் கேட்டிருந்தாராம். 

ஆனால் கடை உரிமையாளர் பிரின்ஸுக்கு அறையை கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பிரின்ஸ், அவரது தாய் சாரதா (55) ஆகியோர் புதன்கிழமை ஸ்டுடியோவிற்குள் புகுந்து அங்கிருந்த புகைப்பட கருவிகள் அனைத்தையும் சேதப்படுத்தி சூறையாடினராம். இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory