» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டத்தில் மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

வியாழன் 12, ஜூலை 2018 7:32:06 PM (IST)

மார்த்தாண்டத்தில் ஜேசிபி ஆபரேட்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் பிபின் (32).ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றார்.இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.பிபின் சமீபத்தில் லோன் வாங்கி வீடுகட்டினாராம்.ஆனால் அந்த கடனை முறையாக கட்ட இயலவில்லை என தெரிகிறது.இதனால் கணவன்,மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் விரக்தியடைந்த பிபின் மதுபானத்தில் விஷம் அருந்தி உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.இதை பார்த்தவர்கள் அவரை மீ்ட்டு மார்த்தாண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிபின் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory