» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

வியாழன் 12, ஜூலை 2018 11:32:21 AM (IST)

குளச்சலில் வீடு புகுந்து 5 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வாணியக்குடி, சர்ச் தெருவை சேர்ந்த ஜெரோமியாஸ். இவரது மனைவி ஸ்டெல்லா. ஜெரோமியாஸ்  இறந்துவிட்டார். இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால், குளச்சலில் உள்ள வீட்டில் ஸ்டெல்லா மட்டும் தனியாக உள்ளார். சம்பவ த்தன்று இரவு ஸ்டெல்லா வழக்கம் போல் தூங்க சென்றார்.மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன. மேலும், வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

நள்ளிரவில் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த நகையையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory