» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோட்டார் போலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு : கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது
வியாழன் 12, ஜூலை 2018 11:13:44 AM (IST)
நாகர்கோவிலில் போலி வாக்காளர் அட்டை அச்சடித்த விவகாரத்தில் கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டார் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வாக்காளர் அடையாள அட்டைகளை போலியாக அச்சடித்து பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு வினியோகிப்பதாக தமிழக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றது.தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர் சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அங்கிருந்து 900 போலி வண்ண வாக்காளர் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அவர்கள் அச்சடித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
கைதான செந்தில்குமார், சுபாஷ்குமார் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது அவர்கள் தங்களுக்கு கோவையில் இருந்து கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் சதிஷ்குமார்(வயது36) என்பவர் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய தகவலின் அடிப்படையில் தாங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சடித்து வழங்கியதாகவும் இது போல் பதிவிறக்கம் செய்து அச்சிட உள்ள கட்டுப்பாடுகள் பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவைக்கு சென்று பாவலர் நகரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் சதீஷ்குமாரை பிடித்து விசாரித்தனர்.
அதன்பிறகு அவரை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. அப்போது அவர் போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்குரிய ரகசிய நம்பரை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.சதீஷ்குமார் வாட்ஸ்-அப் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பு தொடர்பான தகவல்கள் ஒருவருக்கொருவர் அனுப்பப்பட்டதாக கூறியதால் அவரது செல்போனில் இருந்த வாட்ஸ்-அப் மூலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது இதற்காகவே தனியாக ஒரு வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கப்பட்டு இருப்பதும், இதில் தமிழகம் முழுவதும் உள்ள பலர் இணைந்திருப்பதும் தெரிய வந்தது.இதனால் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. போலீஸ் விசாரணைக்கு பிறகு கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் சதீஷ்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போட்டி தேர்வுகளில் பங்குபெறுவது குறித்த விளக்கம்
சனி 16, பிப்ரவரி 2019 8:45:02 PM (IST)

மார்த்தாண்டம் அருகே இளைஞரை தாக்கியவர் கைது
சனி 16, பிப்ரவரி 2019 7:34:48 PM (IST)

முதியவர் கல்லால் அடித்து கொலை : ஒருவர் கைது
சனி 16, பிப்ரவரி 2019 7:18:16 PM (IST)

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி
சனி 16, பிப்ரவரி 2019 6:54:51 PM (IST)

குமரி மாவட்டத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் பணிமாற்றம்
சனி 16, பிப்ரவரி 2019 5:41:43 PM (IST)

இரணியல் அருகே இரு குழந்தைகளுடன் தாய் மாயம்
சனி 16, பிப்ரவரி 2019 5:36:19 PM (IST)
