» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கருங்கல் அருகே பைக் மோதி அதிமுக பிரமுகர் சாவு

வியாழன் 12, ஜூலை 2018 10:40:48 AM (IST)

கருங்கல் அருகே பைக் மோதியதில் அதிமுக பிரமுகர் பரிதாபமாக  உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி (57). அதிமுக முன்னாள் மேலமைப்புப் பிரதிநிதி. ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு கண்ணன்விளை பகுதியில் நடந்து சென்ற ஆண்டனி மீது, பின்னால், பளுகல், மத்தம்பாளை பகுதியைச் சேர்ந்த விஜிகுமார் என்பவர் (38) ஓட்டிவந்த பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆண்டனி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.கருங்கல் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory