» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆதார்அட்டையை பொதுமக்களே பதவிறக்கலாம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 11, ஜூலை 2018 8:00:04 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம், பொதுமக்கள் தங்களது  ஆதார்  அட்டையை தாங்களாகவோ அல்லது  தனியார்  நிறுவனங்கள்  மூலமாகவோ இணையத்தில்  இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டைகளை பெறுவதற்கு https://eaadhaar.uidal.gov.in/ என்ற  இணையதள முகவரியில் சென்று ஆதார் எண் அல்லது ஆதார் பதிவுஎண்  (Enrollment Id) –I ) –ஐ உள்ளீடு செய்து, அதன் பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணிற்குவரும் ஓடிபி  எண்ணை உள்ளீடு செய்து ஆதார்அட்டையை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது தவிர தனியார் பொது சேவை மையங்களிலும்  பொதுமக்கள்  தங்களது  ஆதார்  அட்டையை இணையத்தில்  இருந்து மேற்கண்ட  முகவரியில் பதிவிறக்கம்  செய்து  அச்சிட்டு  கொள்ளலாம். 

ஆனால், தனியாரால் நடத்தப்படும் பொது சேவை மையங்களில்  பிளாஸ்டிக் ஆதார் அட்டை எடுக்க அனுமதி இல்லை. பொதுமக்களும் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை தனியார் சேவை மையங்களில் பெற்று பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் இது போன்று யாரேனும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு  வழங்கினால் மாவட்ட ஆட்சியர் அலுவலக 04652 - 279086 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் வாயிலாக  புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory