» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: அமைச்சர் - எம்எல்ஏ பங்கேற்பு!!

புதன் 11, ஜூலை 2018 12:22:11 PM (IST)கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், கட்டாலங்குளத்தில் வீரர் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில், தமிழக அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழா, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இவ்விழாவில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் மூலம் 243 பயனாளிகளுக்கு ரூ74.29 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கலை பண்பாட்டுத்துறையின் மூலம் 15 கலைஞர்களுக்கு சான்றிதழ்களையும், அமைச்சர் வழங்கி உரையாற்றினார். முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன்   வரவேற்புரை நிகழ்த்தினார். 

விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, மகளீர் அணி செயலாளர் விஜிலா சத்யானந் எம்பி, முன்னாள் வாரிய தலைவர் இரா.அமிர்த கணேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், மேற்கு பகுதி செயலாளர் முருகன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவிப்பு இதுபோல் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ஆப் அவர்களுக்குJul 11, 2018 - 06:08:08 PM | Posted IP 162.1*****

ஹா ஹா ... எல்லாம் நடிப்பு

ஆப்Jul 11, 2018 - 05:04:39 PM | Posted IP 162.1*****

308 வது பிறந்த நாளுன்னு சொல்லுறீங்க .சுதந்திர போராட்ட வீரர்னு சொல்லுறீங்க.இந்தியால சுதந்திர போராட்டம் ஆரம்பிச்சது எப்போதுனு புரியலீங்க .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory