» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தனியார்கள் வாக்காளர்அட்டை வழங்ககூடாது : கன்னியாகுமரி ஆட்சியர் எச்சரிக்கை

புதன் 11, ஜூலை 2018 12:15:31 PM (IST)

தனியார் நிறுவனத்தில் வாக்காளர் அடையாளஅட்டை வழங்கினால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொது இ சேவை மையம்  மூலம் மட்டுமே வண்ண புகைப்பட வாக்காளர் அடையாளஅட்டை  வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்ற வாக்காளர்கள் அவர்களுடைய பதிவு எண்ணை காண்பித்து அரசு இ சேவை மையத்தில் இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். பெயர் திருத்தம், புகைப்படமாற்றம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர்கள் ரூ.25ஃ- கட்டணமாக செலுத்தி அரசு இ சேவை மையத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். 

இந்த மையங்களில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதர இடைத்தரகர்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவது சட்ட விரோதமாகும். மேலும், எந்தவித தனியார் நிறுவனத்திற்கு அடையாளஅட்டை வழங்க அங்கீகாரம் ஏதும் கிடையாது. அவ்வாறு ஏதேனும் தனியார் நிறுவனத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்து தெரியவந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இதுகுறித்து ஏதேனும் தகவல் கிடைக்கப்பெ ற்றால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் 04652 - 279086 என்ற தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் வாயிலாக புகார் அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory