» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மழை

புதன் 11, ஜூலை 2018 11:52:04 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சற்று விடுமுறை எடுத்திருந்த மழை மீண்டும் நேற்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 3.8 செ.மீ. மழை பெய்தது. 

குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 406 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 11.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 757 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தபடி இருந்தது. நாகர்கோவில், என்.ஜி.ஓ. காலனி, ராஜாக்கமங்கலம், மேலகிருஷ்ணன்புதூர், சுசீந்திரம், கொட்டாரம், பூதப்பாண்டி, சீதப்பால், திட்டுவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. குமரி மேற்கு மாவட்டத்திலும் பெரும்பாலான ஊர்களில் மழை பெய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory