» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருநெல்வேலி – காந்ததிதாம் ரயிலுக்கு நாகர்கோலிலில் நிறுத்தம் இல்லை ரயில் பயணிகள் சங்கம்

புதன் 11, ஜூலை 2018 11:04:06 AM (IST)

திருநெல்வேலி – காந்ததிதாம் வாராந்திர ஹம்சாபர் ரயிலுக்கு நாகர்கோவில் நிறுத்தம் இதுவரை இல்லை என்பதால் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில்பயணிகள் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,கடந்த வருட ரயில்கால அட்டவணையில் அறிவிக்கப்பட்ட திருநெல்வேலி – காந்ததிதாம் வாராந்திர ஹம்சாபர் ரயில் ஜுலை 5-ம் தேதி ரயில்வே அமைச்சரால் காந்திதாமில் வைத்து துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் புதிதாக அறிவிக்கும் போது கடந்த வருடம் வெளியிடப்பட்ட ரயில் காலஅட்டவணையில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் நிரந்தர சேவை துவக்கி வைத்து நிரந்தர சேவை துவங்கிவைக்கப்பட்டது. இவ்வாறு இந்த ரயிலில் நாகர்கோவில் டவுண் நிலையத்தில் நிறுத்தம் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

இதை கண்டித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பல அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தது மற்றுமின்றி கன்னியாகுமரி பாரளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான பொன்னார் அவர்களின் கவனத்திறகும் கொண்டு சென்றனர். அவரும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மத்திய ரயில்வே இணை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த ரயில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவித்தார். இதை அடுத்து துவக்கவிழா சிறப்பு ரயில் சனிகிழமை நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. இவ்வாறு சென்ற ரயிலுக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக தலைவர் ஸ்ரீராம் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

இந்த ரயிலுக்கு காந்திதாமிலிலுந்து திருநெல்வேலி மார்க்கம் பயணிக்க ரயில்வே இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொண்டால் இந்த ரயில் நாகர்கோவில் டவுண் நிலையத்தில் நிற்காது என்று தெரிவிக்கிறது. இதைப்போல் மறுமார்க்கம் திருநெல்வேலியிருந்து காந்திதாமுக்கு பயணம் செய்ய பார்த்தால் இந்த வழித்தடத்தில் ரயில் இல்லை என்று தெரிவிக்கின்றது. ஆனால் மத்திய இணை அமைச்சர் அலுவலகம் வாயிலாக இந்த ரயில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நமது அமைச்சர் டிவிட்டர் வாயிலாக இந்த ரயிலுக்கு நிறுத்தம் அனுமதிக்கப்பட்டதாக ஓர் கடிதத்தை பகிர்ந்துள்ளார். 

இந்த கடிதத்தில் நாகர்கோவில் டவுண் நிலையம் பெயரும் உள்ளது. ஆனால் இதுவரை ரயில்வே அதிகாரிகள் இந்த நிறுத்தத்தை அமுல்படுத்தவில்லை. இது மத்திய அமைச்சரையே அவமதிப்பதாகவே உள்ளது. ஆகவே இந்த ரயிலுக்கு நிறுத்தத்தை உடனடியாக ரயில்வே அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் கோரிக்கை வைக்கின்றது. இதற்கு மத்திய இணை அமைச்சர் நடவடிக்கை எடுத்து இந்த ரயிலுக்கு நிறுத்தத்தை உடனடியாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

மத்திய அமைச்சர் திருநெல்வேலி – காந்திதாம் ஹம்சாபர் ரயில் நிறுத்தத்துக்கு இவ்வாறு துதிர நடவடிக்கை எடுத்தது போல திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில்களை இரணியல் ரயில் நிலையத்திலும், நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர ரயில், திருநெல்வேலி – ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில் ஆகிய ரயில்களை குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory