» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி கடலில் தத்தளித்த சுற்றுலாபயணி மீட்பு

புதன் 11, ஜூலை 2018 10:34:21 AM (IST)

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தத்தளித்த சுற்றுலாப் பயணி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பேருந்து மூலம் 50-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வந்தனர். இவர்கள் முக்கடல் சங்கமத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, ராதாசிங் (25) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை அலை கடலுக்குள் இழுத்துச் செல்வதைப் பார்த்ததும் உடன் வந்த பெண் ஒருவர் கையைப் பிடித்து இழுத்து கூச்சலிட்டார். 

இதனைப் பார்த்த கடலோரப் பாதுகாப்பு காவலர் மகேஷ் விரைந்து சென்று ராதாசிங்கை பத்திரமாக மீட்டார். மயக்க நிலையில் இருந்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory