» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவி : ஆட்சியர் தகவல்

புதன் 11, ஜூலை 2018 10:18:18 AM (IST)

தூத்துக்குடி  மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவி வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய கால்நடை குழுமத்தின் 2017-18 ஆண்டு திட்டப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்க்கு (இந்திய அரசு மானியம் 50% தமிழக அரசு மானியம் 25%) ரூ.20,000/- விலைமதிப்புள்ள மின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 9 எண்ணம் வழங்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் இரண்டு கால்நடைகள் வளர்ப்போர்கள் 0.5 ஏக்கர் புல்வளர்ப்பிற்கென இடம் மற்றும்; புல்வெட்டும் கருவிக்கென 25% தொகையினை செலுத்திட விருப்பமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், சுயஉதவி குழு உறுப்பினர் 1 கால்நடை வளர்ப்போராகவும் குறைந்த பட்சம் ¼ ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பதற்கான இடம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 

இதற்கு முன்னர் இதுபோன்ற சலுகைகளை அரசிடமிருந்து பெறப்பட்டவராக இருத்தல் கூடாது. மானிய விலையில் புல் வெட்டும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்தந்த பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களிடம் விண்ணப்பத்தினை அளித்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சேகர்Jul 11, 2018 - 10:43:44 AM | Posted IP 162.1*****

பல் வெட்டும் கருவி வேண்டாம் புல் வெட்டும் கருவி மட்டும் போதும்

அருண்Jul 11, 2018 - 10:26:56 AM | Posted IP 162.1*****

அது பல்வெட்டும் இல்ல. புல்வெட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory