» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை நிறுவனம் அத்துமீறல் : சுந்தரலிங்க பேரவை தலைவர் குற்றச்சாட்டு

செவ்வாய் 10, ஜூலை 2018 6:06:47 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் காற்றாலை நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் காற்றாலை நிறுவனங்களை நிறுவி வருவதாகவும் இவர்கள் நிலங்களை ஆக்கிரமித்தும் ஓடைபகுதிகளை ஆக்கிரமித்தும் காற்றாலை நிறுவனங்களை அமைத்து வருகின்றனர் என சுந்தரலிங்க பேரவை தலைவர் எல்.கே.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வீரன் சுந்தரலிங்க பேரவை தலைவர் எல்.கே.முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல மீனாட்சிபுரத்தில் தனியார் காற்றாலை நிறுவனமான சுசிலான் காற்றாலை நிறுவனம் ஓடைகளை பகுதிகளை ஆக்கிரமித்து சாலை மற்றும் மின் கம்பங்கள் அமைத்ததோடு சிவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் போடப்பட்ட குடிநீர் பைப் லைன்களை தங்களின் தேவைக்கேற்ப்ப மாற்றி அமைத்துள்ளனர். 

மேலும் 15மின் கம்பங்களுக்கு பைப் லைன்களை அதிக வளைவுகளுடன் ப வடிவில் அமைத்துள்ளனர். இதனால் அங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு நீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் குளம்போல் பெருகி வீணாக போகிறது. இது தொடர்பாக மேலமீனாட்சிபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். 

குறுக்குசாலை- ஓட்டப்பிடாரம் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள புளியமரங்களை வெட்டி மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர். இது தொடர்பான புகார் மனுக்கள் ஏற்கனவே நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். இதற்கும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. பொதுமக்களிடம் அத்துமீறி அக்கிரமிப்பு செய்யவதால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கும் எவ்வித நஷ்டஈடுகளும் காற்றாலை நிறுவனம் கொடுப்பதில்லை என கூறினார்.காற்றாலை நிறுவனத்தின் அத்துமீறல்களையும், குடிநீர் வீணாவதையும் தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

நிஹாJul 11, 2018 - 10:13:48 AM | Posted IP 162.1*****

நாட்டின் வளர்ச்சிக்காக தியாகம் செய்ய வேண்டும் என்பார்கள். மீறி தட்டிக்கேட்டால், குண்டர், சமுகவிரோதி என்பார்கள்.

க.முத்துராஜ், மேல மீனாட்சிபுரம், ஓட்டப்பிடாரம்Jul 11, 2018 - 12:00:39 AM | Posted IP 162.1*****

அரசு அதிகாாிகள் பணம் பெற்று விட்டு அவா்களின் அத்துமீறலை கண்டும் காணாமல் செல்கின்றனா்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory