» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை

திங்கள் 25, ஜூன் 2018 10:22:16 AM (IST)


கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.

தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை  நடைபெற்றது. மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மன்யு சூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம்,  மகாலட்சுமி ஹோமம்   நடந்தது. தொடர்ந்து சிறப்பு  அபிசேகமும், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர்,  செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:18:08 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory