» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் நகராட்சிமண்டபத்தில் ரகசிய பட்டாசுகுடோன் : அதிகாரிகள் அதிர்ச்சி

சனி 23, ஜூன் 2018 10:26:19 AM (IST)


நகராட்சி மண்டபத்தில் ரகசியமாக செயல்பட்ட பட்டாசு குடோனை கண்டு அதிகாரிகளே அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் நாகர்கோவிலில் நடை பெற்றுள்ளது.

நாகர்கோவில் நகராட்சிக்கு சொந்தமான கலைவாணர் கலை அரங்கத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகைக்கு விடுவது வழக்கம். மேலும் தீபாவளிதோறும் பட்டாசு கடைகள் நடத்தப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் குத்தகைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரங்கம் மூடி சீல் வைக்கப்பட்டது.  மண்டபத்தில் கிடந்த சில மர பர்னிச்சர் பொருட்களை எடுப்பதாக நகராட்சி ஊழியர்கள் அரங்கத்திற்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கு ஏராளமான பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்திவிட்டு மீதியை எடுத்துச்சென்றுவிடுவார்கள் என அதிகாரிகள் நினைத்திருந்தனர். அங்கு பட்டாசு இருப்பது குறித்து முக்கிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் கலைவாணர் கலை அரங்கத்தின் சீலை அகற்றி உள்ளே சென்று ஆய்வுசெய்தனர். பட்டாசு குடோனை பார்த்து அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்தனர்.அரசு கட்டடத்தில் அதிகாரிகளுக்கே தெரியாமல் பட்டாசு குடோன் செயல்பட்ட விவகாரம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பட்டாசு குடோனால் ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் யார் பொறுப்பு? என்று சமூகஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory