» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மழையால் வீடு இடிந்து விபத்து : பெண் படுகாயம்

வியாழன் 21, ஜூன் 2018 7:07:07 PM (IST)

திருவட்டார் அருகே தொடர் மழையால் பக்கத்து வீடு இடிந்து விழுந்ததில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

திருவட்டார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவட்டார் அருகே மழையால் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்துள்ளார்.காயம் அடைந்தவர்  அனிதா(வயது30). திருவட்டார் அருகே வேர் கிளம்பி கல்லங்குழி பகுதியைச் சேர்ந்தவர். அவரது கணவர் நெல்சன் ஆட்டோ டிரைவர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று மாலை நெல்சன் ஆட்டோ ஓட்டுவதற்காக சென்று விட்டார். அவர்களது 2 குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று விட்டன. இதனால் வீட்டில் அனிதா மட்டும் தனியாக இருந்தார். இவர்களது வீட்டுக்கு பக்கத்தில் பழமையான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளரான சிம்சன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தற்போது அந்த வீடு பூட்டிக்கிடந்தது.

தொடர் மழை காரணமாக சேதம் அடைந்து இருந்த அந்த வீடு திடீரென இடிந்து அனிதா வீட்டின் மேல் விழுந்தது. இதனால் அனிதாவின் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்தது. இந்த இடிபாடுகளுக்குள் அனிதா சிக்கிக்கொண்டார்.வீடு இடிந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி அனிதாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் இடிபாடுகள் அதிகமாக இருந்ததால் பொதுமக்களால் அனிதாவை மீட்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனிதாவை அவர்கள் மீட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயத்துடன் மயங்கி கிடந்த அனிதாவை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்தது பற்றி திருவட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. திருவட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory