» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டாலின் தலைமையால் திமுக தொண்டர்கள் சோர்வு : அமைச்சர் பாென்.ராதாகிருஷ்ணன்

வியாழன் 21, ஜூன் 2018 11:57:46 AM (IST)

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையினால் திமுக தொண்டர்கள் சோர்வடைந்து விட்டதாக நாகர்கோவிலில் மத்தியஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று (21 ம் தேதி) சர்வதேச யோகாதினம் கடைபிடிக்கப்படுகிறது.இதை முன்னிட்டு நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் யோகா பயற்சியில் ஈடுபட்ட பின்பு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தி யாளர்களிடம் பேட்டியளித்தார்.அவர் கூறும் போது,

தமிழக காவல்துறை நடவடிக்கை உரிய எடுக்காததால் தான் பயங்கர வாதிகளின் பயிற்சி களமாக தமிழகம் மாறி உள்ளது. 50 ஆண்டுகள் மாறி மாறி தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்தை குட்டிசுவர் ஆக்கி விட்டனர்.கருணாநிதி தலைமையில் திமுக தொண்டர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையினால் திமுக தொண்டர்கள் சோர்வடைந்து விட்டதாக அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:18:08 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory