» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அம்மா திட்ட சிறப்புமுகாம் நடைபெறும் இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 20, ஜூன் 2018 6:59:20 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் நான்காம் கட்ட சிறப்பு முகாம் 22.06.2018 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டங்களில் நடைபெறவுள்ளது.கல்குளம் வட்டத்தில் தும்பகோடு கிராம த்திற்கு மட்டும், திருநந்திக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்தும், விளவங்கோடு வட்டத்தில் கீழ்குளம் வருவாய் கிராமத்திற்கு மட்டும், குஞ்சா கோடு அரசு தொடக்கப் பள்ளியில் வைத்தும் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த அம்மா திட்டம் நான்காம் கட்ட சிறப்பு முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நிலதாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற மனுக்களை அளித்து பயன்பெறும்படி கேட்டுக்கொ ள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory