» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆரல்வாய்மொழி அருகே விபத்து: புது மாப்பிள்ளை பலி

வியாழன் 14, ஜூன் 2018 6:52:08 PM (IST)

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார்பைக் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணாடி பாலகிருஷ்ணன். அ.தி.மு.க. நிர்வாகி. இவரது மனைவி சுதா.  இருவரும் ஆரல்வாய்மொழி 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள்.
பாலகிருஷ்ணனின் மகன் ராஜகுரு(வயது27). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சீதப்பாலை அடுத்த பூலாங்குழியைச் சேர்ந்த மெர்லின்ஷீபா(24) என்பவருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மெர்லின்ஷீபா 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று அவரை பார்ப்பதற்காக புதுமாப்பிள்ளை ராஜகுரு மோட்டார்பைக்கில் பூலாங்குழி சென்றார்.

தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த கார், மோட்டார்பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுரு சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ராஜகுருவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் கதறி அழுதனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory