» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன்அரிசி பறிமுதல்

வியாழன் 14, ஜூன் 2018 4:20:01 PM (IST)


நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வழியாக டெம்போவில் கேரளாவிற்கு  கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அடிக்கடி ரேசன் பொருட்கள் கடத்துவது சாதாரணமாகி விட்டது.இந்நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் மார்த்தாண்டத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு டெம்போவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.ஓட்டுனரிடம் விசாரித்ததில் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.பின்னர் அந்த வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓட்டுனரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory