» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருக்கோயில் காவலர் பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு வாய்ப்பு

வியாழன் 14, ஜூன் 2018 12:31:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட, திருக்கோயில்களில் காவலாளியாக பணியாற்ற, முன்னாள் ராணுவத்தினர், போலீஸார் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,குமரி மாவட்ட திருக்கோயில்களில் சிறப்பு கோயில் பாதுகாப்புப் பணிக்கு மொத்தம் 85 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களில் சேர 62 வயதுக்குள்பட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.இதில், போலீஸார் குமரி மாவட்ட காவல் கண் காணி ப்பாளர் அலுவலகத்திலும், ராணுவத்தினர் நாகர்கோவில் முன்னாள் படை வீரர்கள் நலன் துணை இயக்குநர் வழியாகவும் மனுக்களை வரும் 30 ஆம் தேதி க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணிக்கு தேர்வு செய்ய ப்படுபவர்களுக்கு மாதம்  ரூ.5,000  ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

வியாழன் 13, டிசம்பர் 2018 10:13:13 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory