» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி - பெங்களூர் நேரடி விமான சேவை: ஜூலை 1ம் தேதி துவக்கம் - காலஅட்டவணை வெளியீடு

புதன் 13, ஜூன் 2018 4:58:04 PM (IST)

தூத்துக்குடி - பெங்களூர் இடையே நேரடி விமான சேவை வருகிற ஜூலை  1ம் தேதி தொடங்குகிறது. இதற்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992ம் ஆண்டு துவக்கப்பட்டு விமான சேவை நடந்து வருகிறது.  தற்போது சென்னை - தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் தினமும் 2 விமானங்கள் இயக்கப்படுகிறது. மேலும், இன்டிகோ மூலம் விமான சேவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் மூலம் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை வருகிற ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். பின்னர், மாலை 4.00 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் புறப்பட்டு 5.15 மணிக்கு பெங்களூர் சென்றடையும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory