» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனவர் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு

புதன் 13, ஜூன் 2018 4:33:03 PM (IST)

தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக மீனவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் சிறிய மற்றும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 8 மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்கள் சிலர் வெளியூர் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இதனிடையே தமிழகத்தில் கடந்த 60 நாடகளாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்த தடை காலம் நாளை 14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், தூத்துக்குடி மீனவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் மீனவர்கள் போதிய வருமானம் இன்றி வறுமையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெரிய விசைப்படகு மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கென்னடி (47) என்ற மீனவர் தூத்துக்குடி மீன்வளத்துறை  துணை இயக்குநர் அலுவலகத்தின் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தென்பாகம் போலீசார் இது தொடர்பாக வழக்ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீன்பிடித்துறைமுக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

எவனோ ஒருவன்.Jun 13, 2018 - 07:23:28 PM | Posted IP 162.1*****

தமிழ்நாடு கடல்சார் ஒழுங்குமுறை சட்டம் 1983 க்கு எதிராக இருக்கும் மீன்பிடி படகுகளை எப்படி அனுமதிக்க கூறமுடியும். தொழிலகங்கள் சட்டத்தை மதிக்கவேண்டும் இல்லை என்றால் இருக்கவே கூட்ட்து என்று திருத்திக்கொள்ளக்கூட அனுமதி கொடுக்காத தூத்துக்குடி மீனவர்கள் எப்படி சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் தங்கள் விசைப்படகுகளுக்கு தொழில் செய்ய அனுமதி கேட்க முடியும். ஒண்ணுமே புரியலடா சாமி....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory