» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு

புதன் 13, ஜூன் 2018 1:31:49 PM (IST)

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், பெருஞ்சாணி, குழித்துறை, தக்கலை, களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது.பேச்சிப்பாறை அணையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் அதிக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 10:16:55 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory