» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்

புதன் 13, ஜூன் 2018 11:28:25 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முத்துக்குட்டி (29). இவர் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். நேற்றிரவு இவர் மோட்டார் பைக்கில் முத்தையாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். 

அங்குள்ள ரவுண்டானா அருகே வந்தபோது, சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஒருவன்Jun 13, 2018 - 03:00:54 PM | Posted IP 162.1*****

ஆமாம் .. எல்லா தனியார் ஷிப்பிங் கம்பனியும் அப்படிதான் , அது மட்டுமல்ல எல்லோருக்கும் குறைவான சம்பளம் கொடுக்கிறது, அங்கும் இங்கும் அலைய வைக்கும் கம்பெனியை நடவடிக்கை எடுக்குமா ??

நிஹாJun 13, 2018 - 12:16:54 PM | Posted IP 162.1*****

தனியார் நிறுவனங்கள் நேரம் காலம் ஏதுமின்றி வேலை வாங்குவது இதற்கு காரணமாக இருக்குமா? விபத்து நடந்தது இரவு நேரம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory