» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை

செவ்வாய் 12, ஜூன் 2018 8:28:39 PM (IST)

குளச்சலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பொன்.ராஜதுரை மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக முதன்மை கல்வி அலுவலக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

குளச்சல் அருகே உள்ள இலப்பவிளை அரசு தொடக்கப்பள்ளியில் தெற்கு புத்தளத்தைச் சேர்ந்த பொன்ராஜதுரை (49) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பொன் ராஜதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி, பெற்றோரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நேரில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி ஆசிரியரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன் ராஜதுரை மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அப்போது பொன் ராஜதுரை திடீரென மயங்கி விழுந்தார்.இந்நிலையில் ஆசிரியர் பொன்.ராஜதுரை மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக முதன்மை கல்வி அலுவலக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory