» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து 18ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

செவ்வாய் 12, ஜூன் 2018 4:32:02 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 18ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் அர்ஜூணன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டையும, மனித உரிமை மீறல்களையும் கண்டித்து 18ம் தேதி தூத்துக்குடியில் கண்டன பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் ஆர்.ரசல் தலைமையில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்றார். 

காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதையும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதையும் கண்டித்து வரும் 18ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு அண்ணாநகர் பண்டுக்கரை சாலையிலிருந்து கண்டன பேரணியும், சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இப்பொதுக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநிலக்கழு உறுப்பினர் ஆர்.மல்லிகா ஆகியோர் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி மாநகர செயலாளர் தா.ராஜா தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், புறநகர செயலாளர் பி.ராஜா முன்னிலை வகிக்கின்றனர். 

இக்கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உயர்நீதி மன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவல் துறையின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் வழங்க வேண்டும். 

துப்பாக்கி சூட்டிற்கு காரணமான முன்னாள் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உயர் அதிகாரிகள், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், பணியிடை நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமை மீறல்கள் செய்த காவல் துறையினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த வேதாந்தா நிறுவன முதலாளி அனில்அகர்வாலை கிரிமினல் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து

சாமிJun 13, 2018 - 02:48:53 PM | Posted IP 162.1*****

மூடப்பட்ட இந்த ஆலை திறக்கப்பட காரணமே இந்த பாழாய்ப்போன கம்யூனிஸ்ட்கள்தான் - இப்போ நல்லவன் போல வேஷம் போடுகிறார்கள்

AnandJun 13, 2018 - 07:00:27 AM | Posted IP 162.1*****

Good

TonyJun 12, 2018 - 08:37:29 PM | Posted IP 162.1*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory