» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனைகள் குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை : விஜயதரணி எம்எல்ஏ., குற்றச்சாட்டு

செவ்வாய் 12, ஜூன் 2018 2:26:06 PM (IST)

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் பேச அனுமதி அளிக்கவில்லை  என சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ., விஜயதரணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையிலிருந்து இன்று விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ., விஜயதரணி வெளியேற்றப்பட்டார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, குமரி மாவட்ட பிரச்சனை பற்றி தொடர்ந்து கேள்விகள் எழுப்பியதால் அவரை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தர விட்டதாகவும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடபாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை எனவும் விஜயதரணி குற்றம்சாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory