» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொதுக்குழு : மாவட்டஆட்சியர் தகவல்

செவ்வாய் 12, ஜூன் 2018 2:00:58 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் .பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கன்னியாகுமரி மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகின்ற 18-06-18 (திங்கட்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின், மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள வருவாய் கூட்டரங்கில் வைத்து நடைபெறும். அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அட்டை ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கிடைக்கப் பெறாதவர்கள் இதனை அழைப்பாக ஏற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, பேட்ரன், வைஸ் பேட்ரன் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் ஆயுட்கால சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் இதர ஆவண நகல்களுடன் 30 நிமிடங்களுக்கு முன்பு தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory