» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புறத்தொடர்பு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

வியாழன் 17, மே 2018 6:03:28 PM (IST)

புறத்தொடர்பு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்டஆட்சியர் தெரிவித்ததாவது:- கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில், மாதம் ரூ.8,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு 10-ம் அல்லது 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதோடு ஒரு வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இத்தகைய தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாதிரி விண்ணப்ப படிவத்தை www.kanyakumari.tn.nic.in என்ற  வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்கள்; புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை 28.05.2018 அன்று மாலை 5.30 க்குள்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் - 629 001. என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory