» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திமுக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் : காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வியாழன் 17, மே 2018 5:49:27 PM (IST)

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக நடத்தும் பாேராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு அறி வுறுத்தியுள்ளது.

கோவளம் - மணக்குடி சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது. இப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. 

ஆனால் காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.மேலும் அவர்கள் வெளியிட்ட செய்திகுறிப்பில் திமுக கோரியுள்ள ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:18:08 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory