» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசேகரத்தில் வெறிநாயை காென்ற பொதுமக்கள்

வியாழன் 17, மே 2018 2:06:11 PM (IST)

குலசேகரத்தில் 2 பெண்களை வெறிநாய் கடித்ததால் கோபமான பொதுமக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேரகம் அரசமூடு விளையாட்டு மைதானம் பகுதியில் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த கழிவுகளை உண்பதற்காக இந்த பகுதியில் ஏராளமான நாய்கள் இங்கு சுற்றித்திரிவது வழக்கம். இவற்றில் பல நாய்கள் வெறிபிடித்து அலை கின்றன. மேலும் இந்த வெறி நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கிறது. குலசேகரம் காவஸ்தலம் தொட்டிப்பாலம் செட்டி தெருவை சேர்ந்தவர் கீதாமணி (வயது 60). இவர் தொட்டிப்பாலம் பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த ஒரு வெறி நாய் அவரை விரட்டி, விரட்டி கடித்தது.

இதில் அவருக்கு கை உள்பட உடலில் பல இடங் களில் படுகாயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து வெறி நாயிடம் இருந்து அவரை காப்பற்றினார்கள். அங்கிருந்து தப்பியோடி அந்த வெறி நாய் அதே பகுதியை சேர்ந்த வசந்தா (65) என்ற பெண்ணையும் கடித்து குதறியது. மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்களையும் அந்த வெறி நாய் கடித்தது.வெறி நாயின் அட்டகாசத்தை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நாயை அடித்து கொன்றனர். வெறி நாய் கடித்த பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory