» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் பணம் பறிப்பு : கன்னியாகுமரியில் வாலிபர் கைது

புதன் 16, மே 2018 7:51:59 PM (IST)

கன்னியாகுமரி பஸ் நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணியிடம் பணம் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி மேல ரதவீதி பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 33). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தின் இருக்கையில் இருந்தவாறு தூங்கிவிட்டார்.அப்போது அங்கு வந்த வாலிபர் ருவர் சரவணன் அயர்ந்து தூங்கியதை கண்டு அவரது சட்டைப்பையில் இருந்து 600 ரூபாய் பணத்தை திருடினார். 

திடீரென்று விழித்துக் கொண்ட சரவணன் சட்டை பையில் இருந்து பணத்தை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து வாலிபரை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டின் கிரேசியஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் பளுகல் பகுதியை சேர்ந்த ஜோசி (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory