» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்களுடனான சந்திப்பு இனி அடிக்கடி நடைபெறும் : கீழமணக்குடியில் கமல்ஹாசன் உறுதி

புதன் 16, மே 2018 12:11:22 PM (IST)



மக்கள் உடனான சந்திப்பு இனி அடிக்கடி நடைபெறும் என கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடியில் மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று இரவு கன்னியாகுமாரிக்கு வந்த அவர் ஹோட்டலில் தங்கினார் இன்று காலை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து காந்தி மண்டபத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் மக்களை பார்த்து உங்கள் அன்பிற்கு நன்றி என்றார்.தொடர்ந்து ரயில் நிலையம் சந்திப்பில் கூடியிருந்த மக்களிடம் பேசிய அவர், 

42 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமாரிக்கு சின்ன பையனாக வந்திருந்தேன். பேருந்தில் தான் வந்து இறங்கினேன் விமானத்தில் வரவில்லை. அப்போது இங்குள்ள தெருக்களில் எல்லாம் என் கால் பாதம் பட்டிருந்தது.இப்போது நான் வந்திருப்பது மக்களை கண்டு சந்தித்து பேச வந்திருக்கிறேன்.மக்கள் உடனான எனது சந்திப்பு இனி அடிக்கடி நடைபெறும். இதை ஒரு கல்வி யாத்திரையாக கருதுகிறேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory