» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசியல் அரங்கமாகும் அண்ணா விளையாட்டுஅரங்கம்: நாகர்கோவில் பொதுமக்கள் வேதனை

புதன் 16, மே 2018 10:29:59 AM (IST)அரசியல் அரங்கமாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் மாறுவதாக அங்கு உடற்பயிற்சி செய்வோரும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த இடத்தில் பாதி விளையாட்டு துறைக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இருந்தும் விளையாட்டு துறை அனுமதி இன்றி அந்த இடம் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டம் ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இதனால் விளையாட்டு துறை இடங்களில் கண்ட படி பேனர்கள் கட்டுவது மைதானத்தின் நுழைவு வாயில் மற்றும் தகவல் பலகையை ஆக்ரமித்து போர்டு வைப்பது ஆகியவை நடந்து வருகிறது இதனால் விளையாட்டு பயிற்சிக்கு வரும் மாணவ,மாணவிகளுக்கும் நடைபயிற்சிக்கு வரும் ஆண்கள்,பெண்கள் கடும் சிரமமும் வேதனையும் அடைந்து வருகின்றனர். 

மேலும் சிறிய இடம் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே இந்த பகுதியில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதிப்பதை அதிகாரிகள் மறு பரி சீலனை செய்ய வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory