» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி வந்த கமலஹாசனுக்கு வரவேற்பு : காந்தி மண்டபத்தை பார்வையிட்டார்

புதன் 16, மே 2018 10:21:57 AM (IST)



மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து தனது சுற்று பயணத்தை துவங்கினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கன்னியா குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு காந்தி மண்டபத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலைய பகுதியிலும், தென் தாமரைகுளத்திலும் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.கீழமணக்குடியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். ராஜாக்கமங்கலம், திங்கள்சந்தை பகுதியில் பொதுமக்களை சந்தித்து பேசும் கமலஹாசன் மதியம் 12 மணிக்கு குளச்சலில் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.மாலை 6 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.முன்னதாக கன்னியாகுமரி வந்த கமலுக்கு மக்கள் நீதி மய்யம் குமரிமாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory