» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போராடும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு : தூத்துக்குடியில் கமல்ஹாசன் பேட்டி!!

செவ்வாய் 15, மே 2018 5:42:08 PM (IST)



போராடும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு என்றுமே உண்டு. மக்களின் கோரிக்கைகளை இனியும் அரசு காது கொடுத்து கேட்காவிட்டால் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடையும் என கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமலஹாசன் நாளை 16 ம் தேதி முதல் 18ம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று பிற்பகல் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது "மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காகத்தான் இந்தப் பயணம். பயணத்தில் மக்கள் அவர்களின் குறைகளைச் சொன்னால் அதை கேட்பேன். யாராவது குறைகளை கூறினால் கேட்கத்தானே வேண்டும். 

ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்திருப்பதே மக்கள் போராட்டத்தின் வெற்றிக்கான முதல்படியாக எடுத்துக் கொள்ள வேண்டும். போராடும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு என்றுமே உண்டு. இனியும் மக்களின் கோரிக்கைகளை அரசு காது கொடுத்து கேட்காவிட்டால் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடையும். எழுத்தாளர் பாலகுமாரன் எனது நீண்டகால நண்பர். சிறந்த எழுத்தாளர். சினிமாவில் மட்டுமல்ல இலக்கத்திலும் சிறந்தவர். நாங்கள் இருவரும் சேர்ந்தே சினிமாவிற்கு வசனம் எழுதி இருக்கிறோம். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது." என்றார். காரில் கன்னியாகுமரிக்குச் செல்லும் அவர், நாளை காலை காந்திமண்டபம் முன்பிருந்து தனது மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார்.


மக்கள் கருத்து

nannமே 15, 2018 - 08:56:24 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

thondanமே 15, 2018 - 07:37:23 PM | Posted IP 162.1*****

தங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory