» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜெயலலிதாவுடன் தமிழகமும் கோமாவில் படுத்துவிட்டது : திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

ஞாயிறு 13, மே 2018 11:36:53 AM (IST)ஜெயலலிதா கோமாவில் மருத்துவமனையில் படுத்தபோது தமிழகமும் கோமாவில் படுத்துவிட்டது என நாகர்கோவிலில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் எம்எல்ஏ.,கள் பிரின்ஸ், வசந்தகுமார்,விஜயதரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும் போது, தமிழகத்தில் நடைபெறும் பொம்மலாட்ட ஆட்சியில் முதல்வர் ஈபிஎஸ், துணை  முதல்வர் ஓபிஎஸ் எனும் பொம்மைகளின்  கயிறு பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரிடம்  உள்ளது. 

மறைந்த ஜெயலலிதா கோமாவில் மருத்துவமனையில் படுத்தபோது தமிழக மும் கோமாவில் படுத்துவிட்டது. கூட்டணி என்பது தேர்தல் சமயங்களில் ஏற்படுவது. எந்தக் கட்சியோடும் ஆயுள்கால கூட்டணி கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory