» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே திடீர் மோதல்: வீடுகள் மீது கற்கள் வீச்சு - போலீஸ் குவிப்பு

வெள்ளி 11, மே 2018 11:12:43 AM (IST)சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 12பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரை பகுதியாகும். அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதுதொடர்பாக இருதரப்பு மீனவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 2 கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

வீடுகள் மீதும் கற்களை வீசினர். இதனால் சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். அந்த இடமே திடீர் போர்க்களமாகி பரபரப்பு நிலவியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்ட 2 கோஷ்டியினரையும் தடுத்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோதல் தொடர்பாக சிலரை மடக்கி பிடித்த போலீசார், அவர்களை காவல்  நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக கன்னியாகுமரி காவல்நிலையத்தில் கஸ்பின் என்பவர் கொடுத்த புகாரில்  6 பிரிவுகளில் 50 பேர் மீது வழக்குபதிவு. ஜேசுபுத்திரன் என்பவரது புகாரின் பேரில் 8 பிரிவுகளில் 20 பேர் மீது வழக்குபதி செய்த போலீசார்  இருதரப்பிலிருந்தும் 12 பேரை கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory