» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்

திங்கள் 16, ஏப்ரல் 2018 7:49:49 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கல்வி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.அதன்படி குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இம்மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் சுமார் 422 பேர் பள்ளி செல்லாமல் இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டம் ஆகிய இரு திட்டங்களின் அதிகாரிகளும் இணைந்து குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கி உள்ளனர்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் ஆய்வு தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் இத்தகைய மாணவர்கள் 422 பேரை கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அவர்களை கண்டறியும் வரை ஆய்வுப்பணிகள் நடைபெறும்.இவ்வாறு கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் இடை நிலை கல்வியை அளிக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்கள். இந்த பணியில் அதிகாரிகளுக்கு துணையாக ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், சமூகநலத்துறை அதிகாரிகளும் துணைபுரிவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory