» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கண்மாய்களில் வண்டல்மண் களிமண் எடுக்க அனுமதி

திங்கள் 16, ஏப்ரல் 2018 7:01:27 PM (IST)

குளங்கள், கண்மாய்களில் வண்டல்மண் மற்றும் களிமண் எடுக்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அனுமதியளித்துள்ளார்.

இது குறித்து குமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரி வித்துள்ளதாவது, பொதுபணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பொறுப்பிலுள்ள குளங்களிலிருந்து வண்டல்மண் மற்றும் களிமண் (மண்பாண்டங்கள் செய்வதற்கு) எடுப்பதற்கு அரசு ஆணை எண்கள்; 50 (ம) 74 தொழிற்துறை (எம்.எம்.சி1) நாள் 27.04.2017 (ம) 21.06.2017-ன்படி 1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் விதி எண் 12(2)(டி)-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை ,ஊரக வளர்ச்சித்துறை பொறுப்பில் உள்ள கண்மாய் , குளங்களில் வண்டல்மண்; களிமண் எடுப்பதற்கு தகுதி வாய்ந்த கண்மாய், குளங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயிகள் ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவிற்கும், ஒரு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு 90 கனமீட்டர் அளவிற்கும், உண்மையான வீட்டுத்தேவைகளுக்கு 30 கனமீட்டர் அளவிற்கும்;, மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் அளவிற்கு களிமண்ணும் எடுத்துச் செல்வதற்கு விதிகளில் வழிவகை செய்யப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரால் 05.05.2017 மற்றும் 03.07.2017 நாளிட்ட தேதியில் பத்திரிக்கை செய்தி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி அரசாணையின் படி (2017-ம் வருடத்தில்) மண் எடுக்க அனுமதி பெற்றுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம்; செய்யும் தொழிலாளர்கள் தவிர, இதர விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் எல்கைக்குட்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துக்;கொள்ளப்படுகிறது. 

மேற்கண்ட விண்ணப்பங்களை வட்டாட்சியர்கள் பரிசீலனை செய்து முறையான ஆணை பிறப்பிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சித்துறை மூலமாக உரிய நடைச்சீட்டுகள் வழங்கப்படும். மேலும் ஒரு கனமீட்டர் கனிமத்திற்கு மண் தோண்டுதல் மற்றும் ஏற்றுக்கட்டணமாக ரூ.35.20-ஐ கட்டணமாக, கேட்பு வரைவோலையாக செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்புஃஊரக வளர்ச்சித்துறை பெயருக்கு செலுத்தவேண்டும். மண் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால அளவு 20 நாட்கள் ஆகும். வழங்கப்பட்ட வண்டல்;களிமண்ணை விவசாயம், வீட்டுத்தேவை ,மண்பாண்டம் செய்தல் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது. 

வண்டல்மண் தேவைக்கான விண்ணப்பங்களை விவசாயிகள் பயிர்சாகுபடி செய்வதற்கான கிராம நிர்வாகஅலுவலர் சான்றுடன் பயிர், சாகுபடி பரப்பு குளத்தின்பெயர், வருவாய் கிராமத்துடன் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக 05.04.2018 அன்று பத்திரிக்கை செய்தி விளம்பரம் செய்யப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தினை விவசாயிகள், பொதுமக்கள் பண்பாண்டத்தொ ழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory