» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் வரும் 21 ல் வேலைவாய்ப்பு முகாம்

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:51:34 PM (IST)

நாகர்கோவில் பிள்ளையார்புரத்தில் வரும் 21 ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிர்வாக மும் இணைந்து நாகர்கோவில், பிள்ளையார்புரத்தில் அமைந்துள்ள சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் 21.04.2018 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல முன்ணனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, செவிலியர், கல்வியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ncs.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 

மேலும், 21.04.2018 அன்று காலை 9 மணி முதல் நேரிலும் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு 04652-264191 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பற்றோர் திரளாக கலந்து கொண்டு பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory