» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மின்வேலி மீது கால்தவறி விழுந்த தொழிலாளி சாவு

திங்கள் 16, ஏப்ரல் 2018 2:13:10 PM (IST)

பூதப்பாண்டி அருகே மின்வேலி மீது கால்தவறி விழுந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பை அடுத்த இந்திராகாலனியை சேர்ந்தவர் தர்மர் (வயது 37), செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு வினிதா (32) என்ற மனைவியும், 2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று வாழை தோட்டத்து மின்வேலி மீது தவறுதலாக கால்தவறி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory