» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி துறைமுக நிதியில் ரூ.4 கோடி திட்டங்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

திங்கள் 16, ஏப்ரல் 2018 10:28:13 AM (IST)

தூத்துக்குடி துறைமுக நிதியில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி வஉசி துறைமுக சிறுவர் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, துறைமுக குடியிருப்பு  பகுதியில் புதிய வணிக வளாகம், பழைய  துறைமுகம் அருகே புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடம், எஸ்ஏவி பள்ளிக்கு  புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக நிதியுதவி, திரேஸ்புரம் முத்தரையர் காலனியில் புதிய மீன்வலை பின்னுதல், ஏலக்கூடம் அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து அங்குள்ள மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். 

பின்னர் அவர் பேசுகையில், மத்திய அமைச்சர்கள், எம்பிகள் அனைவரும் அம்பேத்கர் பிறந்தநாள் முதல் மே 5ம்தேதி வரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அங்கு ஒருநாள் தங்கி, அவர்களுக்கான சட்ட திட்டங்கள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த தீவாக இருந்த முயல்தீவில் இருந்து குடிபெயர்ந்து இங்கு மீனவ மக்களாகிய நீங்கள் வசித்து வருகிறீர்கள். ஆனால் இதுவரையில் இருந்த அரசுகள் உங்களை கவனிக்கவில்லை. ஆனால் துறைமுக நிர்வாகம் தற்போது உங்கள் கோரிக்கைகளை கவனித்து மீனவ சொந்தங்களுக்கு தொழில் வசதி மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துகிறது. மீன் ஏலக்கூடம், படகு கட்டும் தளம் ஆகியவை அமைக்கப்படுகிறது. மாலை நேர படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நமது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தான்  தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார்.  தூத்துக்குடி மாநகரமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளன. ஸ்மார்ட் சிட்டி லிஸ்டிலும் உள்ளது. ஆனால் இந்த நேரத்தில் இந்த பகுதி மக்களில் 2 பேர் மட்டுமே பட்டதாரிகளாக இருக்கின்றனர். இது அதிர்ச்சியளிக்கிறது. உங்கள் தொழிலுக்கு முக்கியதுவம் கொடுப்பதுபோல குழந்தைகளின் படிப்பிற்கும் முக்கியதுவம் கொடுத்து படிக்க வையுங்கள். எந்த வயதிலும் நாம் படிக்கலாம். நான் இந்த வயதில் இந்தி கற்று வருகிறேன். நீங்கள் தமிழ் ஆங்கிலம் கற்கலாம். உங்கள் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் துறைமுக துணை சேர்மன் நடராஜன், போக்குவரத்து அதிகாரி ராஜேந்திரன், குமரி துறைமுக சிறப்பு அதிகாரி விஷ்ணு உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

NanbanApr 16, 2018 - 12:29:28 PM | Posted IP 141.1*****

ஆனால் இந்த நேரத்தில் இந்த பகுதி மக்களில் 2 பேர் மட்டுமே பட்டதாரிகளாக இருக்கின்றனர்.? அடே பொரிஉருண்டை உனக்கு என்னடா தெரியும்.

thoothukudiyaanApr 16, 2018 - 12:13:13 PM | Posted IP 162.1*****

வஉசி துறைமுக சிறுவர் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை - SIRUVAR POONGA VILAYATTU EQUIPMENT ALL IN DAMAGE CONDITION THAT WAS NOT REPAIRED PROPERLY. Thishow Government and pupils money goes to waste. Instead of putting statue they might have spend money to improve poonga first.

makkalApr 16, 2018 - 11:40:05 AM | Posted IP 162.1*****

welcome

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory