» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஒருங்கிணைந்த போராட்டம் நாகர்கோவிலில் ஜெ.தீபா பேட்டி

திங்கள் 16, ஏப்ரல் 2018 10:22:56 AM (IST)

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தனித்தனியாக போராடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து  போராட வேண்டும் என நாகர்கோவிலில் ஜெ.தீபா  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நாகர்கோவிலில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த எம்ஜீஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா செய்தியாளர்களிடம் கூறும் போது,தமிழக அரசு மத்திய அரசால் இயக்கப்படுகிற அரசு,  தமிழக மக்களை பற்றி இவர்களுக்கு கவலை கிடையாது, பதவியில் இருந்தால் போதும் என்று நினைக்கிற அரசாக உள்ளது. மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு தண்ணீர் தேவை.காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தனித்தனியாக போராடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து  போராட வேண்டும், அமைதியான முறையில் நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் என கூறினார்.

பெண்கள் போராட்டம்
 

ஜெ.தீபா கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெண்கள் போராட்டம்செய்தனர்.நலத்திட்ட உதவிகள் தருவதாக கூறி தங்களை பல மணி நேரம் காவல் காக்க வைத்து  வெறுங்கையுடன்  திருப்பி அனுப்பி விட்டதாக குற்றம் சாட்டினார்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

ஞாயிறு 23, செப்டம்பர் 2018 11:25:49 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory