» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தீ விபத்தில் இறந்த குமரி வாலிபர் நாஞ்சில் சம்பத் உறவினர்

செவ்வாய் 13, மார்ச் 2018 6:05:40 PM (IST)

குரங்கணி காட்டுத்தீயில் பலியான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்தின் உறவினர் என தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேறும் பயிற்சி பெற சென்றவர்கள் சிக்கினார்கள். அவர்களில் 10 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் விபின்(வயது34). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 

இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் உண்ணாமலைகடை.  கோவையைச் சேர்ந்த என்ஜினீயர் திவ்யா(30) என்பவருக்கும் விபினுக்கும் காதல் ஏற்பட்டு அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தனது மனைவி திவ்யாவுடன் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேறும் பயிற்சிக்கு சென்ற போது காட்டுத்தீயில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் விபின் பரிதாபமாக உயிர் இழந்தார். 

திவ்யா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தீ விபத்தில் பலியான விபின், டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் உறவினர் ஆவார். அவருக்கு நாஞ்சில் சம்பத் சித்தப்பா முறையாகும். இந்த நிலையில் நேற்று இரவு விபின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று பிற்பகல் விபின் உடல்தகனம் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory