» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தென் மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை : வானிலை மையம் தகவல்

செவ்வாய் 13, மார்ச் 2018 5:54:16 PM (IST)

மாலத்தீவு அருகே நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளதால், தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குமரி கடல் பகுதியில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு நோக்கி நகர்வதாக தெரிவித்தனர்.இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவின் தென் பகுதியிலும் பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளது. 

இந்த மழை இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த எச்சரிக்கை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.குமரி கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக மாவட்டத்தின் உட்புற பகுதிகளிலும் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசியது. அதோடு சாரல் மழையும் பெய்தது.கோதையாறு, அடையாமடை, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கன்னிமார் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இன்று காலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழையும் பெய்தபடி இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory