» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் ரத்து : பயணிகள் சங்கம் கண்டனம்

செவ்வாய் 13, மார்ச் 2018 2:11:24 PM (IST)

நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலை ரத்து செய்யும் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக குமரி மாவட்ட பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சா லைகளில் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாலும், பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதாலும், குமரி மாவட்ட பயணிகள் அதிக அளவில் தற்போது ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் ரயில் பயணமும் பொதுமக்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது. 

இந்த நிலையில் தற்போது பயணிகள் குறைவாக உள்ள ரயில்களை ரத்து செய்யலாம் என்று ரயில்வே ஆய்வு குழு பரிந்துரைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் 20 ரயில்களை ரத்து செய்ய ஆரம்பகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பட்டியில் முக்கியமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலும் உண்டு. இந்த நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலை ரத்து செய்யும் முடிவக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

நாகர்கோவிலிருந்து காலை 7:55 மணிக்கு புறப்படும் 56318 கொச்சுவேலி பயணிகள் ரயிலை ரத்து செய்யலாம் என்று ரயில்வே அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயிலை ரத்து செய்ய கூடாது என்றும் ரத்து செய்ய கூடாது. இவ்வாறு பயணிகள் ரயிலை ரத்து செய்வதற்கு பதிலாக நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கத்தில் இயங்கும் பயணிகள் ரயில் என இரண்டு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி – கொச்சுவேலி ரயிலாக இயக்கினால் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள். 

ரயில்வேத்துறைக்கு அதிக வருவாயும் கிடைக்கும்.56718 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலியிருந்து காலை 6:55 மணிக்கு புறப்பட்டு 8:50 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது. இவ்வாறு வரும் இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி விரைவாக நாகர்கோவில் வருமாறு காலஅட்டவணையை   மாற்றம் செய்து நாகர்கோவில் - கொச்சுவேலி ரயிலுடன் இணைத்து ஒரே ரயிலாக இயக்க வேண்டும். 

மறுமார்க்கம்:- மறுமார்க்கம் கொச்சுவேலியிருந்து 56317 ரயில் மதியம் 1:30க்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 3:55க்கு வருகிறது. இந்த ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து மதியம் 3:30 மணிக்கு திருவனந்தபு ரத்திலிருந்து புறப்பட்டு சுமார் 6:15 மனிக்கு நாகர்கோவில் வந்து இங்கிருந்து கன்னியாகுமரி – திருநெல்வேலி ரயிலையும் இணைத்து திருவனந்தபுரம் - திருநெல்வேலி ஒரே ரயிலாக இயக்க வேண்டும்.

நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில்:-

இதைப்போல் நாகர்கோவிலிருந்து மங்களுர்க்கு இயக்கப்படும் ஏர்நாடு ரயிலும் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த ரயிலை ரத்து செய்யாமல் ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து நாகர்கோவி லிருந்து இரவு சுமார் 10 மணிக்கு புறப்படமாறு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால் குமரி மாவட்ட பயணிகள் கேரளாவின் வடமாவட்ட பகுதிகளுக்கு செல்ல ரயில் வசதி கிடைக்கும்.

நாகர்கோவில் - கோட்டையம் ரயில்:-

நாகர்கோவில் - கோட்டையம் பயணிகள் ரயில் 56304 எண் கொண்ட பயணிகள் ரயில் மொத்தம் 231 கி.மீ தூரம் பயணித்து 42 நிறுத்தங்களில் நின்று மணிக்கு 31கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் கோட்டையம் சென்று விட்டால் மறுமார்க்கம் கோட்டையம் - நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்கப்படுவது கிடையாது. ஆகையால் இந்த ரயிலை மறுமார்க்கமும் இயக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory