» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மீனவர்கள் பத்திரமாக கரை ஒதுங்கினர் : அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

செவ்வாய் 13, மார்ச் 2018 11:20:13 AM (IST)

கன்னியாகுமரி மீனவர்கள் 51 விசைப்படகுகளில் 3 இடங்களில் பாதுகாப்பாக கரை ஒதுங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஏகப்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.இன்ற செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கன்னியாகுமரி மீனவர்கள் 51 விசைப்படகுகளில் 3 இடங்களில் பாதுகாப்பாக கரை ஒதுங்கி உள்ளனர். கர்நாடகாவில் 30, லட்சத்தீவில் 16, கோவா கடற்கரையில் 5 விசைப்படகுகள் கரை ஒதுங்கியுள்ளன.ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்; கவலைப்பட தேவையில்லை என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory