» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமூக பணிகள் தொடர மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை

திங்கள் 12, மார்ச் 2018 4:03:21 PM (IST)



வேதாந்தா நிறுவனத்தின் சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  குஷி குழந்தைகள் நல மையத்தில் பயன்பெற்றுவரும் குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கு பணிபுரியும் பெண்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: வேதாந்தா நிறுவனத்தால் "குஷி" என்னும் குழந்தைகள் நல மையம் கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 14,000 வேதாந்தா குழந்தைகள் நல மையத்தின் மூலம் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட  குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழந்தைகள் நல மையங்கள் இயங்கி வருகிறது. இந்த மையங்களில் மூன்று வயது முதல் ஆறு வயதிற்கு உட்பட்ட  300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த மையங்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சமூக பணிகள் தொடர்ந்து நடைபெற மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

மக்கள்Mar 13, 2018 - 12:27:52 PM | Posted IP 180.9*****

நாளைக்கு ஸ்டெர்லிட்-இல் இருந்து காஸ் லீக் ஆனால் எந்த குழந்தை பயன் பெறுவதாக நீங்கள் கூறுகிறீர்களோ அவர்களும் சேர்ந்து தான் மடிய போகிறார்கள். விபரம் தெரியாமல் பேசாதீர்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory